நம் ஊரில் பேச்சு வழக்கில் முடக்கத்தான் இலை அல்லது முடக்கத்தான் கீரை என அழைக்கப்படும் இந்தக் கீரையானது ஒரு பொக்கிஷமாகும். முடக்கு எனும் சொல் செயல்படாதிருப்பதைக் குறிக்கும். அப்படிச் செயல்பட இயலாது போவதை நீக்கும் தாவரமானதால் இந்த இலைக்கு முடக்கறுத்தான் கீரை எனப் பெயர் கிடைத்தது. உடலில் இருக்கும் மூட்டுகள், தசைகளில் இயக்கத்தை வாத நாடி கட்டுப்படுத்தும். ஒருவரின் உடலில் நாள்பட வாதம் அதிகமாகுகையில் மூட்டு வலி, கை கால்களில் உளைச்சல் தரும் வலி போன்றவை ஏற்படும். முடக்கறுத்தான் கீரையானது உடலில் வாதத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுகளுக்கும், தசைகளுக்கும் வலு அளிக்கிறது.
சிறிதளவு கசப்பிற்கும் துவர்ப்பிற்கும் இடைப்பட்ட சுவை கொண்ட இம்முடக்கறுத்தான் கீரையை உணவில் தோசை போன்றவற்றில் பொடி செய்து கலந்து உண்பதும், சூப் அல்லது ரசம் போன்றவற்றில் இதன் பொடியைக் கலந்து குடிப்பதும் நம் மக்களின் வழக்கமாகும். சிறிது காலம் முன்பு வரை வயல், தோப்பு, குளக்கரை ஓரங்களில் அதிகளவில் காணப்பட்ட இக்கீரையை அதிக அளவில் மக்கள் உணவில் சேர்த்து வந்தனர். காலப்போக்கில் இந்தக் பழக்கம் குறைந்துவிட்டபடியால் மூட்டு வலி மற்றும் கைகால் வலியால் அவதிப்படுவோர் பெருகி விட்டனர். குறிப்பாக ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
முடக்கறுத்தான் கீரை தற்போது லேகியம் வடிவிலும் கிடைக்கிறது. பக்குவமாக சித்தமுறைப்படி தயார் செய்யப்படும் முடக்கறுத்தான் லேகியமானது அனைத்து விதமான வாதச் சமமின்மையால் ஏற்படும் மூட்டு வலி, ஆர்த்ரைட்டிஸ், கை கால் வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. பாரம்பரிய சோலமலை முடக்கறுத்தான் லேகியம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.